top of page

NILAI 6-  நிலை 6 

வயது வரம்பு:

 குறைந்த பட்சம் 9 வயது.

தகுதி:
 
  • அ.த.க நிலை 5 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே வாக்கியங்கள் படித்து புரிந்து கொள்ளுதல்; சுயமாக எளிய வாக்கியங்களை எழுதுதல், இலக்கண அறிவு (ஒருமை, பன்மை, வினைச்சொல், பெயர்ச்சொல், சுட்டுப்பெயர், கால நிலைகள், வினை வகைகள், மற்றும் எட்டு வகையான வேற்றுமை உருபுகள் அறிதல்) போன்ற திறன்கள் பெற்றிருத்தல்.
  • மேலும் தமிழில் அடிப்படை உரையாடல் திறன் பெற்றிருக்க வேண்டும்..

நோக்கம்: 

 
மொழித்திறன்:
 
  • வாக்கியங்களைத் தெளிந்த உச்சரிப்போடு பிழையின்றி படித்தல், புரிந்து கொள்ளுதல், எழுதுதல்.
  • மொழி மாற்றம் செய்தல்; பண்பாடு மற்றும் இலக்கியம் சார்ந்த பாடங்கள் படித்து தெளிவுபட கருத்துக்களை வெளிப்படுத்தல்.
  • வாக்கியங்கள், கருத்துக்கள், வார்த்தைகள் மற்றும் இலக்கணத்தை ஆங்கில மொழியோடு ஒப்பிட்டுப் பயிலுதல்.
  • பேச்சுத் தமிழில் அமைந்திருக்கும் உரையாடல் பாடங்களை பயின்று பொருளறிதல்.
  • எளிமையான கட்டுரை, கடிதம் எழுதுதல்.
  • கதையைப் படித்து புரிந்துக் கொண்டு விடுபட்ட பகுதியை நிறைவு செய்தல்.
இலக்கணம்:
பின் வரும் இலக்கணத்தைப் பாட மற்றும் பயிற்சி நூல்களின் வாயிலாக பயிலுதல்.
  • வினைப்பாகுபாடுகள் (verb classes)
  • வேற்றுமையுருபுகள் (declension)
  • வினைத்தொகை / பண்புத்தொகை (implied verbs / nouns)
  • உவமை ./ உருவகம் (simile / metaphor)
  • சொல்லுருபு (post position)
  • தொடர்வினைகள்(continuous progressive tense)
  • துணைவினைகள் (auxiliary verbs)
  • நேர்க்கூற்று, நேரல்கூற்று (direct indirect speech)
  • பகுபதம், பகாப்பதம்(derivative / primitivewords)
  • மரபுத்தொடர் / வழக்குத்தொடர் (slangs / idioms)
  • இயல்பு/விகாரப் புணர்ச்சி (combination / compounding)
உரையாடல்:
  • மாணவர்களுக்கு அளிக்கப்படும் ஒலிக்கோப்பினைக் கேட்டு அதில் கேட்கப்பட்டிருக்கும்.
  • கேள்விகளுக்கு மாணவர்கள் ஒலி வடிவில் தங்கள் விடையை பதிவு செய்து ஒலிக்கோப்பாக அனுப்பி வைத்தல்.
bottom of page